சாத்தியமான சீர்திருத்தங்களின் சுமை மேலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!
சாத்தியமான சீர்திருத்தங்களின் சுமை மேலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
சாத்தியமான சீர்திருத்தங்களின் சுமை மேலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
53 ஆவது வழமையான அமர்வின் 6 வது கூட்டம் இன்று இடம்பெற்ற போது, இலங்கை தொடர்பான வாய்மொழி மூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது, தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள உரையாடலை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
அத்துடன், தொல்பொருள், வனவியல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்துவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை வரவேற்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா யூசுப் ஏ. அல் நஷிப் தெரிவித்துள்ளார்.