லால் காந்தவின் கருத்து நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட பலத்த சவாலாகும்!
எமது ஆட்சியில் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை Judical Power ஐ மக்களுக்கு வழங்குவதாக கடந்த மே தின கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லால் காந்த தெரிவித்தார்.
நீதிபதிகளுக்கு அரசியல் செயற்பாடுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது.
சட்டத்தை நிலைநாட்டுபவர்கள் கட்சி அரசியலை விடுத்து சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய ஊடக சந்திப்பில் சட்டத்தரணி அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.
லால் காந்தவின் கருத்து இந்நாட்டின் ஜனநாயகத்துக்கு விடுத்த பலத்த சவாலாகும்.
JVP இன் போக்கு எதிராக அன்று செயற்பட்டவர்களை கொலை செய்தனர்.
இந்த நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துவது முற்று முழுதுமாக சுயாதீனமாக செயற்பட வேண்டும்.
லால் காந்தவின் கருத்துக்கு எமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் துப்பாக்கி யுகத்துக்கும் கட்சி உறுப்பினர்கள் அதிகாரத்தை பெறுவதற்குமான அரசியல் பயணத்திக்கு இடமளிக்க முடியாது.
இந்த நாட்டின் அபிவிருத்தியில் எரிசக்தி துறையும், புதுப்பிக்கத்தக்க வலுசக்திகளும் மிக முக்கியமானவை.
இதில் இலங்கை மின்சார சபை முக்கியமானது.
இது மக்களுக்குரிய அரச நிறுவனமாகும்.
இலாபமீட்டும் மின்சார சபையை 12 பங்குகளாக பிரித்து விற்க முற்படுகின்றனர்.
இவ்வாறு பிரித்தால் இலங்கை மின்சார சபையின் இருப்பு குறித்து பாரிய கேள்வி எழுகிறது.
12 பங்குகளாக பிரித்து இலாபமீட்டும் பங்குகளை விற்க முற்படுகின்றனர்.
புதிய மின்சார சட்டம் இலங்கை மின்சார சபையை விற்பனை செய்வதற்கான சட்டமாகவே கொண்டு வந்துள்ளனர்.
இது மக்களின் அடிப்படை உரிமை சார்ந்தது.
2016 ஏப்ரல் 26 எம்மால் ஆரம்பிக்கப்பட்ட மன்னார் காற்றாலை மின் உற்பத்திசாலையை தனியாருக்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மன்னார் இலாபமீட்டும் கற்றாலையை விற்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாரின் தேவைக்காக இவ்வாறு செய்கின்றனர்.
அடுத்த தேர்தலுக்கு பணம் சேகரிப்பதற்கும், தமது சொந்த நலன்களை அடைந்து கொள்ளும் பொருட்டே மக்கள் ஆணையில்லாத இந்த ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த ஊழல் நிறைந்த கொடுக்கல் வாங்கல்களுக்கு ஜனாதிபதி நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும்.
உத்தேச புதிய மின்சார சட்டத்திற்கு எதிராக நாம் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் இன்றைய ஊடக சந்திப்பில் சட்டத்தரணி அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.