வடமாகாண வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பூரண ஆதரவு வழங்க ஐ.நா. மீண்டும் உறுதி!
வடமாகாணத்தில் வாழும் பொது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பிலும் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் வாழும் பொது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பிலும் தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்றூ பிரான்ச் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் நல்வாழ்வு தொடர்பில் திருப்திகரமான போக்கு இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகளின் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாக வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.