நிதிக் குழு கூட்டத்திற்கு சஜித் பிரேமதாஸவை அழைப்பது உகந்ததல்ல - சபாநாயகர் சபையில் அமைதியற்ற நிலை.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பது உகந்ததல்ல என சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

நிதிக் குழு கூட்டத்திற்கு  சஜித் பிரேமதாஸவை அழைப்பது உகந்ததல்ல - சபாநாயகர்    சபையில் அமைதியற்ற நிலை.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பது உகந்ததல்ல என சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்றிருந்ததாகவும், இதன்போது அவருக்கு கருத்து வெளியிட சந்தரப்பம் வழங்கப்படவில்லை எனவும் தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்ததாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற கூட்டங்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது குறிப்பிட்ட பொறுப்புவாய்ந்த நபர்களையோ அழைக்க நடவடிக்கை எடுப்பது உகந்ததல்ல என்று குறிப்பிட்ட சபாநாயகர், அந்தக் கூட்டத்தின் தகவல்களை எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்க குழுவின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, அவ்வாறெனில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு விசேட இடம் இல்லை என்றா கூறுகின்றீர்கள் என சபாநாகரிடம் வினவினார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அதிகாரிகளை தமது காரியாலயத்திற்கு அழைத்து வினவும் உரிமை எதிர்க்கட்சித் தலைவருக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவ்வாறெனில், அனைத்து அரச அதிகாரிகளையும், அழைத்து விசாரிக்கும் உரிமை உள்ளது என்றா கூறுகின்றீர்கள் என சபாநாயகரிடம் பதில் கேள்வி தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், எந்தவொரு நேரத்திற்கும் அதிகாரிகளை அழைக்குமாறு குறிப்பிட்டார்.

பின்னர் மீண்டும் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியினதோ, அரசாங்கத்தினதோ அல்லது அமைச்சர்களினதோ அழுத்தங்களின் பேரில் அவர்கள் சமுகமளிக்காமல் இருக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவர்கள் சமுகமளிக்காவிட்டால், அது தமது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்றும் கூறினார்.