ஏப்ரல் 21 தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர - ஹேமசிறி  விடுவிக்கப்பட்டமையை வலுவற்றதாக்கக் கோரி மேன்முறையீடு

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகளுக்காக முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று உயர்நீதிமன்றில் முன்னிலையானார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபரினால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு, ஐவரங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.