சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது!
யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பகுதியில் இன்று சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து படகு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.