தாழமுக்கத்தின் நாளை நகர்வு குறித்த எதிர்வுகூறல்!
நேற்றைய தினம் அந்தமான் கடல் பிராந்தியத்தின் மத்திய பகுதி மற்றும் தாய்லாந்து வளைகுடா பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது, இன்று தெற்கு அந்தமான் கடல் பிராந்தியம் மற்றும் அதனை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் கடல் மட்டத்திலிருந்து 3.1km தூரம் வரை காணப்படுகின்றது.
இது நாளை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) சற்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்து வரும் 02 நாட்களில் தமிழ்நாட்டில் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் லட்ச தீவு மற்றும் மாலதீவு கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட முதலாவது தாழமுக்கமானது தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது.
இது நாளை முதல் படிப்படியாக இதன் வலு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.