சினிமா புகழை வைத்து முதலமைச்சர் ஆகலாம் என சிலர் நினைக்கிறார்கள் - திருமாவளவன் காட்டம்

சினிமா மூலம் கிடைத்த புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர் என திருமாவளவன் குற்றம்சுமத்தியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வரலாம். நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியதை வரவேற்கிறோம். 

சினிமா புகழை வைத்து முதலமைச்சர் ஆகலாம் என சிலர் நினைக்கிறார்கள் - திருமாவளவன் காட்டம்

விஜய் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று தெரியவில்லை. எனினும் அவர் அம்பேத்கர், காமராஜர் பற்றி படிக்குமாறு கூறியது வரவேற்கத்தக்கது என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவரை வரவேற்கிறோம். மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

கேரளாவில் நடிகர் மம்முட்டி, கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார், பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சான் என பலர் சினிமாவில் தாம் பெற்றுக் கொண்ட புகழை பயன்படுத்தவில்லை. 

எனினும் தமிழகத்தில் மட்டும் தான் வாய்ப்புக்களை இழக்கும் நேரத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கின்றனர். 

எனவே, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்ற சாபக்கேடு தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.