ஜனாதிபதி நிதிய புலமைப் பரிசில் திட்டம் ஆரம்பம்!
“ஜனாதிபதி புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டம் - 2024” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரி மாளிகையில் சற்று முன்னர் ஆரம்பமானது.
கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 5,108 மாணவ, மாணவியர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதோடு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியிலிருக்கும் 10,126 பாடசாலைகளைகளில் 1 - 11 வகுப்பு வரையில் கல்வி பயிலும் 100,000 மாணவ, மாணவியருக்கு புலமைப்பிரிசில் வழங்கப்படவுள்ளன.
இதற்காக ஜனாதிபதி நிதியம் 4 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.