48 மணித்தியாலங்களுக்கு முடங்கப் போகும் சமூக வலைத்தளங்கள்!
சமூக வலைத்தளங்களை 48 மணித்தியாலங்களுக்கு முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இன்று 18 ஆம் திகதி தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்களுக்கு சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைந்த பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக நவீன முறையில் மக்கள் மத்தியில் வேட்பாளர்களின் தகவல்கள் சென்றடையும் வண்ணம் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கண்காணிப்பதற்கு விசேட கணினி பாதுகாப்பு பிரிவு இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர்தல் இடம் 21 ஆம் திகதிவரை சமூக வலைத்தளங்களில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.