ரஷ்யாவில் கைது ​செய்யப்பட்ட ​கஞ்சிபானி மற்றும் ​அமில - தோட்டாக்களில் KPI பின்னணி என்ன?

ரஷ்யாவில் கைது ​செய்யப்பட்ட ​கஞ்சிபானி மற்றும் ​அமில - தோட்டாக்களில் KPI பின்னணி என்ன?

“கஞ்சிபானி இம்ரான்” மற்றும் “ரொடும்பே அமில” என அழைக்கப்படும் அமில சேபால ரத்நாயக்க ஆகிய பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள்  மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இந்த விடயத்தை உறுதிப்படுத்துமாறு இன்டர்போல் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் பிரமுகர்களான "கஞ்சிபானி இம்ரான்" மற்றும் "ரொடும்பே அமில" ஆகியோர் முன்னர் டுபாயில் போதைப்பொருள் மன்னன் "மகந்துரே மதுஷ்" உடன் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர் இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றொரு சந்தேகத்திற்குரிய குற்றக் கும்பலுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவரும் நீதிமன்றத்தால் பிணையில் ​​செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
இதற்கிடையில், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் “கே.பி.ஐ” என குறிக்கப்பட்டிருந்ததால், “கிளப் வசந்த” கொலையில் “கஞ்சிபானி இம்ரானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலும், “ரொடும்பே அமில” என அழைக்கப்படும் அமில சேபால ரத்நாயக்க மீதும் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதுருகிரியவில் ‘கிளப் வசந்த’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லொகு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவன்குமார பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், லொகு பெட்டியின் சகோதரர் சஞ்சீவ புஷ்பகுமார டி சில்வா மற்றும் போதைப்பொருள் மன்னன் மெர்வின் ஜானாவின் மனைவியும் சந்தேக நபருடன் பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இதன்படி, லொகு பெட்டியை விரைவில் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை பொலிஸார் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.