இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு குறைந்த செலவில்!
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, இந்நிகழ்வு தேசத்தின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் பெருமையுடனும் கம்பீரத்துடனும் இடம்பெறும் என வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான முதலாவது ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், 77ஆவது சுதந்திர தின நிகழ்வை குறைந்த செலவில் கொண்டாடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த வருட நிகழ்வுக்கு ரூ. 107 மில்லியன் செலவிடப்படடுள்ளது. இந்த ஆண்டு முடிந்தவரை செலவுகளை குறைக்க ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
அத்துடன், சுதந்திர தின நிகழ்வை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதியை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.