முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை இந்த மாதம் முதல் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் யமுனா பெரேரா தெரிவித்தார்.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு ரூ.2,500 ஆகும். இந்த உதவித்தொகையை ரூ.5,000 ஆக அதிகரிக்க அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.