மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் இன்று நாள் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (23) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (24) காலை 7:00 மணி வரை செல்லுபடியாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து காங்கசன்துறை மற்றும் புத்தளத்திலிருந்து ஹலவத்தை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹலவத்தையிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
மேலும், திருகோணமலையிலிருந்து காங்கசன்துறை மற்றும் புத்தளம் முதல் ஹலவத்தை வரையான கடற்பரப்புகள் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஹலவத்தையிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0-2.5 மீற்றர் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அது நிலத்தை நோக்கி வரும் அலைகளின் உயரம் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.