மடு திருத்தல விழாவில் பக்தர்களின் நலன்கருதிய ஏற்பாடுகள்!

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இருந்துவரும் பக்தர்களின் நலன் கருதி, அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா ஆயத்த பணிகள் குறித்து ஆராயும் 2வது கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கருத்துரைத்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அவர்களுக்கான சுகாதாரம், பாதுகாப்பு, குடிநீர், மருத்துவம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்காக விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக மாவட்ட  அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.