இரண்டு வீடுகளில் நடக்கப் போகும் பிக்பாஸ் சீசன் 7 - புதிய அப்டேட்!

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக  எதிர்பார்க்கப்படும் நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இரண்டு வீடுகளில் நடக்கப் போகும் பிக்பாஸ் சீசன் 7 - புதிய அப்டேட்!

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக  எதிர்பார்க்கப்படும் நிலையில் நிகழ்ச்சி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மிக பாரிய ரசிகர் கூட்டமே உள்ளது. 

கடந்த ஆறு வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. 

கடந்த ஆறு சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார்.

அவர் நடித்துள்ள ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் இடம்பெற்றுள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் வைரலான பிரபலங்கள், பரபரப்பாக இருந்து இன்று வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள், சின்னத்திரையில் கவனத்தை ஈர்த்தவர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள், நகைக்சுவை நடிகர்கள் இவ்வாறு பலரின் கலவையாகவே போட்டியாளர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் 7வது சீசனில் பங்கேற்கப் போகிறவர்கள் என சில போட்டியாளர்களின் விவரம் என ஏற்கனவே இணையத்தில் வைரலாக பகிரப்பட்டது.

அந்த பட்டியலில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பிருத்திவிராஜ் என்ற பப்லு, சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து ஜாக்குலின், சர்ச்சை கருத்துகளால் மிகவும் பிரபலமாக இருக்கும் ரேகா நாயர், நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ், தனியார் பேருந்து பெண் ஓட்டுநராக பிரபலமான ஷர்மிளா உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

அந்த அப்டேட்டை தொடர்ந்து மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதாவது இந்த சீசனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும் அதில் ஒரு வீட்டில் இந்த சீசன் போட்டியாளர்களும் இரண்டாவது வீட்டில் பழைய பிக் பாஸ் சீசன் போட்டியாளர்களும் தங்க வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மற்றும் பழைய போட்டியாளர்கள் தனித்தனியே இரண்டு வீடுகளில் இருக்கப்போவதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று எண்ணத் தோன்றும், ஆனால் அதுதான் இல்லையாம். 

வழக்கமான எண்ணிக்கையில் தான் இரண்டு வீட்டிலும் போட்டியாளர்கள் பிரித்து தங்க வைக்கப்படுவார்களாம்.

எனினும் இந்த தகவல் குறித்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பு இது வரையில் வெளியாகவில்லை. 

பிக் பாஸ் சீசன் 7 ப்ரோமோ இந்த மாத இறுதியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் இப்போதிலிருந்தே அதிகமாக உள்ளது.