முதல் நாளே விஜய்யை மிஞ்சிய சிவகார்த்திகேயன்!

கடந்த செப்டம்பர் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட்.
தளபதி விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர். ஆனால், தெலுங்கில் இப்படம் சரியாக போகவில்லை என்றும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என தகவல் வெளிவந்தது.
மேலும் கோட் படம் முதல் நாள் தெலுங்கில் ரூ. 3.8 கோடி வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், இந்த வசூலை சிவகார்த்திகேயனின் அமரன் படம் முறியடித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பல திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு உலகளவில் கிடைத்துள்ளது.
இதுவரை உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. இதில் தெலுங்கில் முதல் நாளே ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்து கோட் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது.