நடிகர் விஜயகாந்த் காலமானார் - பூரண அரச மரியாதை வழங்கப்படும் - தமிழக முதல்வர்!
பிரபல கோலிவூட் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் காலமானார். சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல கோலிவூட் நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் காலமானார்.
சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது.
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அது பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி வெலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரச மரியாதை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவ அறிக்கை >>>