நடிகர் அஜித்குமாரின் ஏகே-63 திரைப்படத்தின் பெயர் வெளியானது!

நடிகர் அஜித்குமார் [AK] நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் இன்று மாலை வெளியானது.
அஜித்தின் அடுத்த திரைப்படம் ஏகே-63 குறித்த புதிய தகவலே இன்று வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்திற்கு 'குட் பேட் அக்லி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
அத்துடன், இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
அஜித் தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இது அஜித்தின் 62ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் அர்ஜுன், ஆரவ், திரிஷா மற்றும் ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்புகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.