ஜெயிலர் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'.

ஜெயிலர் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. 

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

மேலும், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர்.  

அனிருத் இசையமைக்கும் இப்படம் எதிர்வரும் ஒகஸ்ட் 10ஆம் திகதி திரைக்கு வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 6ஆம் திகதி காவாலா (Kaavaalaa) என்ற பாடலின் பாடல் வரிகள் அடங்கிய காணொளி வெளியாகவுள்ளது. 

அதற்கான சின்ன ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.