வைரலாகும் அரண்மனைக்கிளி நடிகை காயத்ரியின் புகைப்படங்கள்

மும்பையில் பிறந்து வளர்ந்த காயத்திரி அரண்மனைக்கிளி திரைப்படத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். நடிகர் ராஜ்கிரண் நடித்த அரண்மனைக் கிளி திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி.
இந்த படம் இளையராஜாவின் இசைக்காகவே பேசப்பட்ட மிகப் பெரிய படம். இதில் ராஜ்கிரண் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது.
இதில் காயத்ரி நாயகியாக நடித்திருந்தார். அவருக்கும் கிராமத்துக்கும் சம்பந்தமே இல்லை,ஆனாலும் இப்படத்தில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தார் காயத்ரி.
மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற “ராசாவே உன்னை விட மாட்டேன்” என்ற பாடலும், “பூங்குயிலே பூங்குயிலே கேளு” என்ற பாடலிலும் தனது அசாத்திய நடிப்பால் அசத்தியிருப்பார் காயத்ரி.
இந்நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய கோகுலத்தில் சீதை நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி. தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.