லியோ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

நடிகர் விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடத்துள்ள லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்கான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'லியோ' திரைப்படம் இம்மாதம் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், லியோ படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியானது.