சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்குத் தயார்!

புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். 

சந்தோஸ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிக்குத் தயார்!

அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் முதல் படத்திலேயே அவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்தநிலையில் அடுத்தடுத்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II,  குக்கூ, ஜிகிர்தண்டா, மெட்ராஸ், கபாலி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன் பல விருதுகளை பெற்று பிரபலமாகியுள்ளார். 

இந்த நிலையில் சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் பாரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ரசிகர்கள் மற்றும் இசை கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Santhosh Narayanan is coming to Jaffna! – The Island