எஸ்.கே.21 படத்தின் தலைப்பு அறிவிப்பு!

எஸ்.கே.21 படத்தின் தலைப்பு அறிவிப்பு!


சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்.கே.21' படத்தின் தலைப்பு இன்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த படத்துக்கு “அமரன்“ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'எஸ்கே21' படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

அத்துடன், ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

May be an image of 3 people and text