லியோ திரைப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் விபரம்!

மிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் 19 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை செய்துள்ளது.

லியோ திரைப்படத்தின் உலகளாவிய முதல் நாள் வசூல் விபரம்!

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படத்தின் வெளியீட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக பொக்ஸ் ஒபிஃஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.