8 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல்- எவ்வளவு தெரியுமா!

தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.
முதல் முறையாக விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இப்படத்தில் அமைந்தது. மேலும் பல ஆண்டுகளுக்கு பின் யுவன் இசையில் தளபதி விஜய் நடித்தார். மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடுமையான விமர்சனங்கள் இப்படத்தின் மீது வைக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் GOAT திரைப்படம் வெளிவந்து 8 நாட்களை கடந்துள்ளது. இந்த 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உலகளவில் GOAT திரைப்படம் 8 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 332 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் வார இறுதிவரை வசூல் வேட்டையாடி வந்த GOAT, இரண்டாம் வார துவக்கத்தில் இருந்து சற்று பின்தங்கி உள்ளது. இந்த வாரத்தின் இறுதியில் மீண்டும் வசூல் அதிகரிக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.