இசைவாணர் கண்ணனுக்கு பெருமை சேர்க்கும் பேர்த்தி

பவதாயினி பாடும் திறனைக் கண்டு வியந்தோரில் நானும் ஒருவனே..

ZEE தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப பாடல் போட்டியில் தன் இனிய குரலால் உலக மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள பவதாயினி எம் இசைவாணர் கண்ணன் அவர்களின் பேத்தி என்பது பெருமைக்குரியது...

இச் சிறுவயதில் தமிழகத்தின் பிரபல பாடகர்களின் பாராட்டை பெற்ற பவதாயினி பரதத்திலும் சிறந்து விளங்குவதும் சிறப்பு...

தமிழகத்தின் கலாகேச்சிரா உட்பட பல முன்னணி அரங்குகளில் இவரின் நடனம் மேடை ஏறியதும் எமக்கு பெருமையே...

இவரின் தந்தை நாகராஜன் சிறந்த மிருதங்க வித்துவான், 

தாயார் கிருசாந்தி சிறந்த பரதக் கலைஞர்..

இசைவாணர் கண்ணன் அவர்கள் 1970 ளில் ஈழத்து மெல்லிசை மரபுக்கு வடிவம் கொடுத்த இசை ஆளுமை பிற்காலத்தில் எம் விடுதலைக்கான பல நூறு பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்தவர் என்பதும் உலகறிந்ததே..

இவரின் மாமாக்கள் முரளி சத்தியன் , மற்றும் சாய்தர்சன் இருவருமே இன்றைய நாட்களில் எம்மிடையே பிரபலமானவர்கள் என்பது யாவரும் அறிந்தமையே...

இவரின் சிறிய தாயாரும் சிறந்த வீணை இசைக் கலைஞர் என்பதும் சிறப்பு...

பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இவர்கள் இசைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.....

வாழ்த்துகள் பவதாயினி....

நன்றி படங்கள் zee தமிழ் , ஊர்குருவி

RKS....

நன்றி அருள்மொழித்தேவன் பிரான்ஸ்