பௌத்த மத ஆக்கிரமிப்பும் இந்தியாவும் தமிழீழமும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறிமுறை தமிழர்கள் கையில் இல்லாமையும், சமஸ்கிருதம், ஹிந்திமொழி மற்றும் இந்து, பிராமண பரம்பலை இந்திய உபகண்டம் எங்கும் பரப்ப அல்லது பாதுகாக்க முயலும் இன்றைய இந்திய இந்துமத அணுகுமுறை கொண்ட இந்தியாவின் பாதுகாப்பை தமிழர்கள் நாடி நிற்பதும் தமிழீழத்தின் சமய பன்முகத் தன்மையிலும் சைவத் தமிழர் வாழ்வியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பௌத்த மத ஆக்கிரமிப்பும் இந்தியாவும் தமிழீழமும்
Continuation of previous interview

பௌத்த மத ஆக்கிரமிப்பும் இந்திய, தமிழீழ உறவும் 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறிமுறை தமிழர்கள் கையில் இல்லாமையும், சமஸ்கிருதம், ஹிந்திமொழி மற்றும் இந்து, பிராமண பரம்பலை இந்திய உபகண்டம் எங்கும் பரப்ப அல்லது பாதுகாக்க முயலும் இன்றைய இந்திய இந்து மத அணுகுமுறை கொண்ட இந்தியாவின் பாதுகாப்பை தமிழர்கள் நாடி நிற்பதும் தமிழீழத்தின் சமய பன்முகத் தன்மையிலும் சைவத் தமிழர் வாழ்வியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற நேர்காணலின் தொடர்ச்சி...

 

கேள்வி: வெடுக்கு நாறி மலையில் இந்துக்கோவில் அழிப்பு, ஆனையிறவு பார்க்கப்படவேண்டியது. எனவே இவை இரண்டும் இருவேறுபட்ட மதவழிபாட்டுடன் தொடர்பு பட்டவையாகும்.

தமிழீழத் தமிழர்கள் இன்று இந்து சமயம் அல்லது சைவ சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லாமிய சமயம் என்ற மூன்று வகையான மதவழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். எனினும் வரலாற்றில் தமிழ்ப் பௌத்தம், சமணம் போன்ற பல சமய முறைகளையும் பின்பற்றி உள்ளனர், அதுபோலவே சிங்கள பௌத்தர்கள் தமிழீழத்தை கைப்பற்றி ஆண்ட காலப் பகுதிகளில் சிங்கள பௌத்தமும் தமிழீழத்தில் ஆக்கிரமிப்பு வடிவமாக நிலவி - அழிந்துள்ளது என்பதும் வரலாறு.

தமிழ்நாட்டில் இருக்கும் இந்து மற்றும் சைவ சமய முரண்பாடென்பது வேறானது தமிழீழத்தில் அந்த வடிவம் வேறானது. தமிழ்நாடு, இந்தியா என்ற நாட்டிற்குள் சமஸ்கிருதம், ஹிந்திமொழி மற்றும் இந்து, பிராமண ஆதிக்கத்திற்குள் அழிந்துவிடும் என்ற அபாயத்தை எதிர் நோக்கி அதிலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு நிற்கின்றது.

ஆனால் தமிழீழம் என்பது அவ்வாறான ஆதிக்கத்தை பெரிதும் எதிர் நோக்கவில்லை தமிழீழத்தில் பிராமணர்கள் வெறும் பூசகர்கள் ஆக மட்டுமே அதிகூடிய வகிபாகம் செய்கின்றனர். தமிழீழத்தில் சைவ, வைஸ்ணவ முரண்பாடும் இல்லை இந்துமதம் என்பது ஆறுவகைச் சமயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வடிவமாகக் கருதப்பட்டாலும் இந்து சமயம் என்பதை சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயம் என்ற வடிவமாகவே தமிழீழச் சைவர்கள் அல்லது இந்துக்கள் கருதுகின்றனர் இங்கு இராமரும், இராமபக்தரான அனுமாரும், சிவபக்தரான இராவணனும் உரிய முறையில், பாகுபாடின்றி வணங்கப்படுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறிமுறை தமிழர்கள் கையில் இல்லாமையும், சமஸ்கிருதம், ஹிந்திமொழி மற்றும் இந்து, பிராமண பரம்பலை இந்திய உபகண்டம் எங்கும் பரப்ப அல்லது பாதுகாக்க முயலும் இன்றைய இந்திய இந்துமத அணுகுமுறை கொண்ட இந்தியாவின் பாதுகாப்பை தமிழர்கள் நாடி நிற்பதும் தமிழீழத்தின் சமய பன்முகத் தன்மையிலும் சைவத் தமிழர் வாழ்வியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணுகுமுறையில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணக்கூடிய விதத்திலும் தமிழீழத்தில் சமய சமத்துவத்தைப் பேணக்கூடிய விதத்திலுமான ஆரோக்கியமான உறவுமுறைகளை இந்தியாவுடன் தமிழீழம் உருவாக்கிக் கொள்வது அவசியமாகின்றது.

அந்தவகையில் தமிழ்ச் சைவர்களும், தமிழ்க் கிறிஸ்தவர்களும், தமிழ் இஸ்லாமியர்களும் இந்தியாவுடனேயே திருமண பந்தம் என்ற வகையில் இரத்தக் கலப்புறவைக் கொண்டுள்ளனர். இங்கே கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏனைய இஸ்லாமிய, கிறிஸ்தவ நாடுகளுடன் உறவைப் பேணினாலும் திருமண பந்தம் என்பதும், இனக்கலப்பு என்பதும் எட்டுக்கோடி இந்தியத் தமிழர்களுடனேயே நிகழ்கின்றது அல்லது நிகழக்கூடியது.

எனவே மூன்று சமயங்கள் சார்ந்த உறவையும் தமிழீழம் இந்தியாவுடன் பேணக்கூடிய விதத்தில் தமிழீழத்தின் உறவுகளைத் தமிழீழத் தமிழ்த் தலைமைகள் உருவாக்கிக்கொள்ளுதல் அவசியமானது.

இந்தியா உலகில் வல்லரசாக நிலைத்து நிற்கவேண்டும் என்றால் இன்றைய இந்திய இந்து மதத்தில் வேரோடிக் கிடக்கும் சாதிய அமைப்பு முறை அகற்றப்பட்ட இந்துமதமறுமலர்ச்சி அவசியமாகின்றது.

இவ்வாறானதொரு இந்துமத மறுமலர்ச்சி தோன்ற எவ்வளவு காலம் எடுக்கும் என்பது ஒருபுறம் இருக்க இன்று தமிழீழத்தைக் காட்டிலும் இந்தியாவில் அதிகம் வேரோடிக் கிடக்கும் சாதியப் பிரிவினைகள் தமிழீழத்தில் தலை தூக்காதவாறும், தமிழீழத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் பாகுபாடுகளை படிப்படியே இல்லாது ஒழிக்கும் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டதாகத் தமிழீழத் தமிழ்த் தலைமைகளின் செயல்நெறிகள் அமையப்பெறுதல்வேண்டும்.

இவை வெறுமனே சாதி, சமயம் சார்ந்தவையாக மட்டும் அல்லாது தமிழீழத்தின் கல்வி, கலாச்சாரம், மாதவழிபடு என்பவற்றுடன் பின்னிப் பிணைந்தவையாகும்.

அந்தவகையில் தமிழர்கள் தமக்கான கல்வி, கலாச்சாரம், மதவழிபாடு போன்றவற்றிற்கான நிலைப்பாடுகளை வரையறுத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகின்றது.

இன்றைய நிலையில் தமிழீழ விடுதலையை அல்லது தமிழீழத்தின் இருப்பை இலக்காகக் கொண்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் படிப்படியான சமூக விடுதையைக் நோக்கிய செயற்பாடுகளில் சிங்கள சார்பு தமிழ்க் கட்சிகளாலும், சாதிய எதிர்ப்பையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் அடிப்படையாகக் கொண்ட இடதுசாரி தமிழ்க் கட்சிகளாலும் அல்லது அவ்வாறு சிந்திக்கும் தமிழ்ச் சிவில் சமூகத்தினராலும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.

இந்த இடத்தில் இன்று சாத்வீக வழியில் போராடும் அரசியல் தலைமைகள் பிரிவினைகளாலும், மூட பழக்க வழக்கங்களினாலும் புரையோடிக் கிடக்கும் தமிழ்மக்களின் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதுடன், சிங்கள சார்புக் கட்சிகளினதும், தமிழீழத்தின் பூரண விடுதலையே தமிழ்த்தேசிய இருப்பின் பாதுகாப்பு என்ற தமிழ்த் தேசியப் பார்வையற்ற இடதுசாரிகளினதும் முகத்திரைகளைத் தமிழர்மத்தியில் தெரியப்படுத்தி தமிழர்களின் தமிழ்த் தேசிய இருப்பையும் தமிழர்களின் இன விடுதலை மற்றும் சமூக விடுதலை என்ற இரண்டையும் வென்றெடுக்கக் கூடியவிதத்திலான அரசியல் செயற்பாடுகளை இடையறாது முன்னெடுத்தல் அவசியமானது.

சமய, சாதிய குடும்பக் கட்டமைப்பில் இருந்து தமிழ்த் தேசிய விடுதலையே தீர்வு என்ற அடிப்படையில் சாத்வீக வழியில் சிவில் சமூக பிரதிநிதிகளாகவும், கட்சி சார்ந்தவர்களாகவும் செயலாற்ற முன்வரும் அனைவருக்கும் உரிய மிக முக்கியமான கடமை: இதுவரையில் தமிழீழ விடுதலைக்காக உயிர்கொடுத்து - மிகப்பெரும் அர்பணிப்புக்கள் செய்த தமிழ்ச் சமூகத்தை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளக்கூடிய சமூகச் சிக்கல்களைப் புரிந்துகொள்ளக்கூடிய தமிழ்ச் சமூகத்தை சமூக ஏற்றத்தாழ்வு அற்ற கட்சி மற்றும் சிவில் சமூகக் கட்டுமானங்களாக்கி சமூகத்தில் வரும் முரண்பாடுகளை அறிவியல் ரீதியான கலந்துரையாடல்களின் மூலமாக சமய, சமூக நல் இணக்கங்களாக வெற்றிகொண்டு விடுதலையை வென்றெடுக்க வழிவகை செய்யவதே இன்று அவசியமாகின்றது.

கேள்வி: தமிழீழத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் மதவழிபாட்டு சார்ந்த நிலைப்பாடுகள் எவ்வாறு அமையப்பெற வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: கல்வியை எடுத்துக்கொண்டால்: அரச ஒடுக்குமுறையின் கொடூரத்தால் மிகவும் சீரழிவுக்கு உள்ளாகியிருப்பது எமது கல்வித் துறையேயாகும். எனவே, கல்வித் துறையை வளர்த்து, விரிவுபடுத்தி, முன்னேற்றம் அடையச்செய்யும் பணிக்கு தமிழீழம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

தமிழைத் தாய் மொழியாகவும் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகவும் கொண்டிருத்தல் வேண்டும்.

சிங்களம் உட்பட இந்திய உபகண்ட மொழிகளுக்கும், ஏனைய உலக மொழிகளுக்கும் முறையே உரிய முக்கியத்துவம் கொடுத்து நிற்றல் வேண்டும்.

தமிழீழத்தின் சகல பிராந்தியங்களிலும் சர்வகலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்து. இளம் பரம் பரைக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்சார்ந்த கல்வி புகட்டும் வகையில் எமது தேசத்தின் கல்விக்கான திட்டமிட்டமிடல்கள் முறையே அமையப்பெறுதல் வேண்டும்.

சிறுவர்களுக்கு கல்வி கட்டாயமாக்கப்படுவதும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான நிபுணத்துவத்தையும், அறிவுத் துறைகளையும் உருவாக்கும் வகையில் முறையான கல்வித்திட்டம் ஒன்றை எமது தேசம் செயற்படுத்துவதும், விஞ்ஞான உலகப் பார்வையையும், சமூகப் பிரக்ஞையையும், மனித சமத்துவ உணர்வையும் வளர்க்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படுவதும் அவசியமாகின்றது.

அதேபோன்று கலாச்சார நிலைப்பாடென்பதில்:

தமிழீழ தேசத்தின் கலாச்சாரத்தை பாதுகாத்து, கட்டிவளர்த்து, மேம்பாடுசெய்வதையே நோக்கமாக கொண்டிருத்தல் வேண்டும். கலைத்துவ வெளிப்பாடுகளுக்கும், கால சிருஷ்டித்தன்மைக்கும் ஊக்கமளித்து, கலைகளை வளர்த்து, எமது மக்களின் கலாச்சார வாழ்வை சிறப்புறச்செய்யத் தமிழீழம் தொடர்ந்தும் உழைத்தல் வேண்டும். அதேவேளை உலகின் ஏனைய கலாச்சார விழுமியங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுப்பதுடன் எமது கலாச்சார விழுமியங்களையும் ஏனைய உலக விழுமியங்களுடன் பரிமாறிப் பாதுகாப்பதே இன்றைய உலகில் தமிழீழ தேசம் நிலைத்துவாழ வழிவகுக்கும்.

அதுபோலவே மதவழிபாட்டுமுறைமை சார் நிலைப்பாடென்பதில்:

தமிழீழ தேசம் மத சார்பு அற்ற நிலைப்பாட்டை கடைபிடித்தல் வேண்டும். அதேவேளை, சகல மதங்களை சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டு சுதந்திரத்திற்கு தமிழீழம் உத்தரவாதம் வழங்குவதுடன், சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும், மத - கலாச்சார பண்புகளை பேணிவளர்க்கவும் தமிழீழம் தொடர்ந்து ஊக்கமளிப்பதும் அவசியமாகின்றது.

(தொடரும்…………)

.