தமிழர் உரிமைக் குழுமம், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநர் அலுவலகத்தை சந்தித்தது.
இலங்கை மீதான வழக்கு பற்றிக் கலந்துரையாடுவதற்காக தமிழர் உரிமைக் குழுமம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்தை சந்தித்தது.

இலங்கை மீதான வழக்கு பற்றிக் கலந்துரையாடுவதற்காக தமிழர் உரிமைக் குழுமம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுநர் அலுவலகத்தை சந்தித்தது.
தமிழர் உரிமைக் குழுமம் , புலம்பெயர் தமிழர்களின் பல பிரிவுகளுடன் இணைந்து, இலங்கை அரசும் மற்றும் தனிநபர் குற்றவாளிகளும், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்துள்ள குற்றங்களுக்குப் பொறுப்புக் கூற வைப்பதற்கு இருக்கக்கூடிய அனைத்துச் சட்ட வழிகளையும் தொடர்வதற்கு உறுதி பூண்டுள்ளது.
உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, சமூக நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் அரசியல் மாற்றத்திற்கான எந்தவொரு நேர்மையான முயற்சியும், அர்த்தமுள்ளதாக எட்டப்படும்.