ஆதித்யா எல்1' ஜனவரி முதல்வாரம் லாக்ராஞ்சியனை சென்றடையும்!

இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1' விண்கலம், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்.1 என்ற லாக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6-ஆம் திகதி அடையும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்1' ஜனவரி முதல்வாரம் லாக்ராஞ்சியனை சென்றடையும்!

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1 என்பதால் அது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருக்கின்றது.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

இந்த விண்கலம் செப்டம்பர் 2 ஆம் திகதியன்று ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இஸ்ரோவால் ஏவப்பட்டது. 

இந்தநிலையில் ஆதித்யா எல்1 ஜனவரி 6 ஆம் திகதியன்று எல்1 புள்ளியில் நுழையும் என்று சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யா எல்1 அதன் இலக்கை அடைந்தவுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை அளவிட உதவும் என்று சோம்நாத் குறிப்பிட்டுள்ளார்.