காணொளி வாயிலாக ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

காணொளி வாயிலாக ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

சினிமா மற்றும் பக்திப் பாடல்களை பாடி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டுகின்றார்.

தனது பிறந்த நாளை கேரளாவில் கொண்டாட விரும்பிய யேசுதாஸ் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த போதிலும் பிறந்தநாளை காணொளி வாயிலாக ரசிகர்களுடன் கொண்டாடினார்.

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பாடகர் கே.ஜே.யேசுதாஸ் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

8 தேசிய விருதுகள் மட்டுமின்றி ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமின்றி இந்திய மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.