ராஜபக்சர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி கஜேந்திரன் தரப்பு வடக்கு கிழக்கு முழுதும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக தமிழர்களுக்காக நாம் என தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ் பொதுவேட்பாளருக்கும் எதிர்ப்புக்களை அவர்கள் வெளியிடுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் அவர்கள் தேர்தலை புறக்கணிக்க கோரும் காரணம் என்ன?
யுத்த முடிவின் பின்னர் கஜேந்திரன் தரப்பினர் தமிழ் கட்சிகள் ஒரு முடிவெடுத்தாலும் அவர்கள் தனியான ஒரு வழியை நோக்கி நகர்வதற்கான காரணம் என்ன?
இவற்றுக்கான பதில்களை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்த செல்வராசா கஜேந்திரன் பின்வருமாறு விளக்கியிருந்தார்.
“இறுதி யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், தமிழரசுக் கட்சியானது சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
தமிழ் மக்கள் மீது எல்லையற்ற அடக்குமுறைகளை பயன்படுத்திய ராஜபக்சர்களை எதிர்க்கும் நிலைப்பாடாகவே தாங்கள் பொன்சேகாவை ஆதரிக்கின்றோம் என அப்போது தமிழரசுக் கட்சி கூறியிருந்தது.
இந்த தேர்தலில் பொன்சேக்கா தோல்வியுற்று ராஜபக்சர்கள் வெற்றி பெற்றதன் பின்னர், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
அதாவது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ராஜபக்சவுக்கு நன்றி என சம்பந்தன் தெரிவித்திருந்தார். இது அக்கால தமிழ் அரசியலில் பாரிய சர்ச்சைகளை எழுப்பியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்று 2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் ''ஏக்கிய ராஜ்ய'' என்ற வார்த்தை உள்ளடக்கிய அனைவருக்கும் ஒரே தீர்வு என்ற ஒரு சட்டமூலம் நாடாளுமன்றில் தயாரிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தில் அறுதிப் பெரும்பான்மையாக அப்போது நாடாளுமன்றில் இருந்த தமிழரசுக்கட்சியும் பங்குகொண்டிருந்தது.
இது தமிழ் மக்களுக்கு மிகவும் பாரதூர முடிவையே வழங்கும் என எதிர்ப்புக்களும் மேலோங்கியிருந்தது.
இதற்கு காரணம் தமிழ் மொழியில் உள்ள ஒற்றையாட்சி என்ற பதம் நீக்கப்பட்டமையே.
மேலும் வடக்கு கிழக்கு இணைப்பை கைவிடும் தீர்மானமும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான தொடர்ச்சியில் இன்று இலங்கையில் யுத்த முடிவின் பின்னர் 4 ஆவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் சிறுபான்மையினரின் அதாவது தமிழ் மக்களினுடைய வாக்குகள் என்பது ஒரு முக்கிய நிலையை அடைந்துள்ளது.” என்றார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வலையொளி இணைப்பு: