பாணின் விலையை 100 ரூபாய் வரை குறைக்க சாத்தியம்!
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரை குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உணவுற்பத்தி பொருட்கள் பலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளை அரசாங்கம் குறைக்குமாயின் பாண் இறாத்தல் ஒன்றின் விலையையும் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் உட்பட வெதுப்பக உணவுகளுக்கான மூலப் பொருட்களின் விலைகள் தற்போது அதிகரித்துள்ள காரணத்தினாலேயே உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.