அடியாட்கள் கைது
யாழில். பொதுமக்கள் மத்தியில் இடையூறு மற்றும் வன்முறையுடன் செயற்பட்டால் கடும் நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ண தெரிவித்துள்ளார்.
அதிக வட்டிக்கு பணம் வழங்கி அதனை மீள பெறுவதற்காக, பணம் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் காணொளிகள் எமது தளத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவாகியிருந்தன.
இந்த காணொளிகள் தொடர்பில், ஆராய்ந்து அதனுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறை கைது செய்ததுடன், அவர்கள் எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைபோன்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை அருகில் உள்ள காவல்நிலையத்தில் அல்லது வடமாகாண சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் அலுவலகத்துக்கு முறைப்பாடுகளை வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண சிரேஸ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ண குறிப்பிட்டுள்ளார்.
சமூகத்துக்கு குந்தகமான விடயங்களை வெளிப்படுத்தி நியாயம் கிடைக்க www.tamilvisions.com என்றும் துணைநிற்கும்.