என் குடும்பத்தை பற்றி பேச நீ யாரு? என் உழைப்பை ஒரு நொடி கூட உன்னால செய்ய முடியாது - ராதிகா ஆதங்கம்
விகடன் சின்னத்திரை விருது வழங்கல் நிகழ்ச்சியில் விருது வாங்கிய நிலையில் ஆதங்கமாக பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தன்னை பற்றி எதிர்மறையாக பரவி வரும் கருத்துகளுக்கும், நடிகைகள் குறித்து சிலர் விமர்சனங்களை வைத்து வருவதை குறித்தும் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ராதிகா பேசிய இந்த காணொளி இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வரும் நிலையில் பல பிரபலங்களும் இதை பாராட்டி வருகிறார்கள்.
நடிகை ராதிகாவிற்கு அறிமுகமே தேவை இல்லை. கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போது அங்கே கேள்வி குறைந்த பிறகு தான் பல நடிகைகள் சின்ன திரையை நோக்கி அடி எடுத்து வைப்பார்கள்.
ஆனால் ராதிகா வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது சின்ன திரையில் நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பலமொழிகளிலும் சீரியல் மற்றும் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதோடு ராடான் நிறுவனத்தை தொடங்கி இருக்கும் ராதிகா பல சீரியல்களையும் தயாரித்தும் வருகிறார். இது போதாது என்று அரசியலிலும் காலடி எடுத்து வைத்து முக்கிய பிரபலமாக வலம் வந்த கொண்டிருக்கிறார்.
இத்தனை சிறப்புகள் இருந்தாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பேசப்படும் நபராகவும் ராதிகா இருந்து வருகிறார்.
அதே நேரத்தில் அடிக்கடி ராதிகாவின் குடும்ப விஷயங்கள் பற்றி இணையத்தில் பேசப்பட்டும் வருகிறது இது குறித்து சமீபத்தில் விகடன் சின்னத்திரை 2023 விருதுகள் விழாவில் விருது வாங்கிய ராதிகா சரத்குமார் அப்போது தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் ராதிகா பேசுகையில், நாங்க பிரபலமாக இருக்கிறோம் என்பதற்காக ஒரு சிலர் என்ன வேணாலும் பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் நடித்த படத்தை பிடிக்கவில்லை என்றால் அது பற்றி பேசுங்க. இல்ல எங்களுடைய அந்த படத்தில் கேரக்டர் உங்களுக்கு பிடிக்கவில்லையா அது பற்றி பேசலாம்.
காரணம் நீங்கள் பணத்தை செலவழித்து எங்களுடைய படத்தை பார்க்கிறீர்கள். அதற்காக பேசலாம். ஆனால் எங்களுடைய பர்சனல் வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் உரிமையை தந்தது?
பிரபலங்கள் என்றால் நீங்கள் என்ன வேணாலும் பேசலாம் நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம் என்று இருக்கிறதா? இணையத்தின் பயன்பாடு எல்லோருக்கும் இருக்கிறது என்பதற்காக முகத்தை வெளியே காட்டாமல் என்ன வேணாலும் பேசலாம்... எவ்வளவு கீழ்தரமாகவும் பேசலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் ஒருவரை தவறாக பேசி விட்டோம் அதனால் அவர்கள் அதையே நினைத்து உடைந்து போய் விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது எல்லாம் அப்படி கிடையாது. நாங்கள் பிரபலமாக இருந்தாலும் எங்களுக்கு மனசு இருக்கு ஆனாலும் இந்த மாதிரி முகத்தையே காட்டாமல் கண்ட மேணிக்கு பேசுபவர்களை பற்றி எங்களுடைய மனதில் நாங்கள் ஏற்றிக் கொள்வது கிடையாது.
காரணம் நாங்கள் இந்த மாதிரி கருத்து வெளியிட்டு நேரத்தை வேஸ்ட் பண்ணிக் கொண்டிருப்பவர்களை போல நாங்கள் சும்மா இருப்பது கிடையாது.
எங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது. இவ்வளவு பேசுபவர்கள் என்னுடைய ஒரு நிமிட வேலையை செய்ய முடியுமா? நான் எவ்வளவு வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம் என்பது இந்த மாதிரி நெகட்டிவ் கருத்துக்களை போடுபவர்களுக்கு தெரியுமா? அவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு அடுத்தவர்களை பற்றி கதை கதையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் எவ்வளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் அடுத்தவர்களை நம் இஷ்டத்திற்கு என்ன வேணாலும் பேசலாம் என்று பேசிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு அவரவர் வேலையை போய் பாருங்கள் என்று காட்டமாக அந்த நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார் பேசியிருக்கிறார். இதை பல பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள்.