ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு இணக்கம்!

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாயினால் குறைப்பதற்கு உள்ளுர் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். 

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுடன் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான விபரங்கள் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அதேநேரம், ஒரு கிலோகிராம் சோளத்திற்கான இறக்குமதி வரியை 75 ரூபாயிலிருந்து 25 ரூபாவாக குறைக்குமாறு உள்ளுர் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் அமைச்சரிடம் கோரியுள்ளனர்.

குறித்த கோரிக்கை மற்றும் கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கான உள்ளுர் உற்பத்தியாளர்களின் இணக்கப்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் மகிந்த அமரவீர இன்று கொண்டு செல்லவுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 200 ரூபாயினால் குறைக்கப்பட்டு, தற்போது, ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.