யாழ் - தேர்த் திருவிழாவில் தங்க ஆபரணங்களை திருடிய 4 பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள ஆலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற தேர்த் திருவிழாவின் போது பெண் ஒருவரின் தங்க ஆபரணங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள ஆலயம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற தேர்த் திருவிழாவின் போது பெண் ஒருவரின் தங்க ஆபரணங்களை திருடிய குற்றச்சாட்டில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைதானவர்கள், வவுனியா, சிலாபம் மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 முதல் 49 வயதுகளையுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.