யாழ். பல்கலையில் மோதல் - இருவர் சிகிச்சை பிரிவில் அனுமதி

யாழ். பல்கலையில் மோதல் - இருவர் சிகிச்சை பிரிவில் அனுமதி

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களிடையே நேற்யை தினம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், காயமடைந்த இரு மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நேற்றைய தினம் புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 3ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களிடையே முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மோதலிலேயே இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.