டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது!

கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் இரண்டாயிரத்து 300 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு தொற்று உறுதியானர்வகளில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து இனங்காணப்பட்டுள்ளனர். 

அத்துடன், கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, மன்னார் போன்ற பிரதேசங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 இந்தநிலையில், இந்த ஆண்டின் ஆரம்பம் முதல், இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளான, 44 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.