கொம்பனி வீதியில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது!

கொம்பனி வீதி, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் புகையிரதப் பாதையின் மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (08) திறந்து வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் எஞ்சிய நிர்மாணப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன், முழுத் திட்டத்துக்கான மதிப்பீடு 5,278,081,272.43 ரூபாயாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.