எரிபொருள் விலை திருத்தம் இன்று - விலைகள் குறைப்பு!

எரிபொருள் விலை திருத்தம் இன்று - விலைகள் குறைப்பு!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இடம்பெறவுள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டது.இதற்கிடையில், ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

அதன்படி, ஜூலை மாதத்திற்கான திருத்தப்பட்ட விலை ஒகஸ்ட் மாதம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது.

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ரூபா. 379, சூப்பர் டீசல் ரூபா. 355 ஆகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை லீற்றருக்கு ரூ. 202 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

Updated Price list 

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும்.

379 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 337 ரூபாவாகும்.

317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 307 ரூபாயாகும்.

355 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்  லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 352 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலையில் மாற்றம் செய்யப்படா நிலையில் ஒரு லீற்றர் 202 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது.