மின்வெட்டு குறித்து சஜித் பிரேமதாஸ கண்டனம்!
![மின்வெட்டு குறித்து சஜித் பிரேமதாஸ கண்டனம்!](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67aac517b4397.jpg)
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.
மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முன்னைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துவதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதும், குறைந்த தேவைக் காலத்தை நிர்வகிக்காத மோசமான நிர்வாகமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.