பராட்டே சட்டமூலத்தை கைவிட்டாலும்  மூலதனத்தை அவர்களுக்கு ஏன் வழங்கவில்லை சஜித்! 

பராட்டே சட்டமூலத்தினால் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் சுற்றுலா  ஆகிய துறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எதிர்க்கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பாராட்டே சட்டமூலம்   கைவிடப்பட்டாலும், அரசாங்கத்தினால்  அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள்  தொடருமா என தெரிந்துகொள்ள வேண்டும்  என்று கேள்வி எழுப்பினார். இந்தத் தொழிற்துறையில் ஈடுபட்டவர்களின்  சொத்துக்களில் எந்த அளவிலான  சொத்துக்கள் கடந்த வருடம் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது என்பது குறித்தும்  அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
 
நிலையியற் கட்டளை சட்டம் 27 (2) கீழ் பாராளுமன்றத்தில் இன்று(21) கேள்வி எழுப்பிய போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோன்று வங்கிகளின் ஊடாக பிரதான கடன்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான விதிகள் சட்டமூலத்தில்  மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்க முன்னெடுக்கும் நீண்ட மற்றும் குறுகிய கால நடவடிக்கை என்ன என்பது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர  உற்பத்தியாளர்கள் தொடர்பில் தேசிய கொள்கை திட்டம் ஒன்று தயாரிப்பது குறித்து  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதா? இந்த நாட்டில் உள்ள தொழில் முனைவர்கள்  அல்லது புத்தாக்க துறையை  மேம்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள  பங்களிப்புக்கு குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த நான்கு வருட காலமாக பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட பாராட்டே  சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை  தற்காலிகமாக இடை நிறுத்தினாலும், அந்தக் காலத்தில் அந்த செலவை ஈடு செய்கின்ற வகையில் அவர்களுக்கான மூலதனத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம்  நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிப் பட்டியலில்  உள்ள தொழில்துறையாளர்களின் கடனை  புதிதாக மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  இதன் போது சுட்டிக்காட்டினார். 

வீழ்ச்சி அடைந்துள்ள  தொழில்துறையாளர்களுக்கு  நிவாரணங்களை பெற்றுக் கொடுக்காதது  ஏன் என்ற கேள்வியை எழுப்பியதோடு,  அவர்களுக்கான மூலதனத்தையும் ஈடு செய்ய முடியுமான செலவையும் வழங்காதது ஏன்  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கேள்வி  எழுப்பினார். 

சிறுபோக அறுவடையின் போது  அரசாங்கம் ஏன் நெல்லை கொள்வனவு செய்வதில்லை.

கடந்த போகத்தின் போதும் இந்த போகத்தின் போதும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு எவ்வளவு?  கடந்த இரு போகங்களின் போதும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லின் அளவு எவ்வளவு?  என்றும் கேள்வி எழுப்பினார். அரசாங்கம் இதுவரையும்  முறையாக நெல்லை கொள்வனவு செய்யவில்லை. நிலையான நிர்ணய  விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதாக கூறினாலும், நெல் கொள்வனவு  இடம்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.  
நெல் கொள்வனவு  இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை அறிய வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். 

அதே போன்று நெல் கொள்வனவுக்காக  ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? நெல் கொள்வனவில் அரசின் குறைந்த தலையீடு காரணமாக பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் சர்வாதிகாரப் போக்கு  கையே ஓங்கியுள்ளது. இந்த சர்வாதிகாரப் போக்கை கட்டுப்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்றும்  கேள்வி எழுப்பினார். 

சிறுபோக அறுவடை மேற்கொள்ளப்படுகின்ற  இந்த சந்தர்ப்பத்தில் நெல்லின் விலை   குறைவடைந்துள்ளது. நிர்ணய விலையின் கீழ்  விவசாயிகளின் நெல் உற்பத்திகளை   கொள்வனவு செய்யாதது பாரிய மக்கள் பிரச்சினையாக மாறியிருக்கிறது என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

வலையொளி இணைப்பு-