இலங்கையில் கப்பல் துறையை ஊக்குவிக்க பிரான்ஸ் உதவி!
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் நாட்டுக்கான விஜயத்தின் போது, இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பணிப்பிரிவின் பிரதானி சாகல ரத்நாயக்க இதுதொடர்பில் ஜனாதிபதி மக்ரோனுக்கு அறிவித்ததையடுத்தே பிரான்ஸ் ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
கப்பல் துறையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிரான்ஸ் கொண்டுள்ளதுடன், அந்நாட்டு நிறுவனங்கள் இலங்கைக்கு உதவியை பெற்றுக்கொடுக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளாா்.
இந்த செயற்பாடுகளை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஊடாக ஒருங்கிணைக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்