உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவு!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியையில் இந்திய அணி 70 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு தன்வசப்படுத்தியது. 

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவு!

வன்கடே மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 117 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

இன்றைய போட்டியில் விராட் கோலி பெற்ற சதத்தின் ஊடாக ஒருநாள் போட்டிகளில் 50 ஒருநாள் சதங்களை பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை பதிவுசெய்துள்ளார்.

அத்துடன், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக அரைசதங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, ஸ்ரேயஸ் ஐயர் 105 ஓட்டங்களை அணி சார்பாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் மற்றும் ரஷின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது. 

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பில் டேர்லி மிட்செல் 134 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் மொஹமட் ஷமி 57 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.