ஐ.சி.சி தலைவர் போட்டிக்காக பதவியை துறக்கும் ஜெய் ஷா!

ஐ.சி.சி தலைவர் போட்டிக்காக பதவியை துறக்கும் ஜெய் ஷா!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் போட்டியிடுவதற்காக ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா  பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் தெரிவு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் போட்டியிடுவதாயின் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ஜெய் ஷா விலக வேண்டும் என்பது விதிமுறை.

இதனடிப்படையில் அவர் பதவி விலகுவார் என கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராகவும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் ஜெய் ஷா உள்ளமை குறிப்பிடத்தக்கது.