தமிழக மீனவர்கள் தொடர் போராட்டம் - கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க தீர்மானம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையரையற்ற போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுதவிர, எதிர்வரும் 20ம் திகதி இராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.