இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 3ஆம் திகதி காலை 492 விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
 
அப்போது 5 கண்காணிப்பு கப்பல்களின் சென்ற இலங்கை கடற்படையினர் இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். 

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ராபர்ட், பெஸ்கர் உள்பட 23 பேரை சிறைப்பிடித்தனர். அவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து குறித்த மீனவர்கள் கடற்படை அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இன்று அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது 20 மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே, இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய ரூபாயில் 5 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஜகாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.