ஒரு கோடி பேரை காப்பாற்ற தலைநகரை மாற்றும் ஈரான்!
தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தலைநகரை மாற்றம் செய்ய அதிக நிதி செலவு ஏற்படும். அதேபோல் அலுவலகங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
மக்களும் உடனடியாக இடம்பெயருவது சிரமமான காரியமாக இருக்கும் என்று கவலையுடன் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரானை பொறுத்தவரை தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு நீண்டகாலமாக விவாதத்தில் உள்ளது.
1979ம் ஆண்டில் இருந்தே இந்த கோரிக்கை என்பது நிலுவையில் உள்ளது.
அதாவது முன்னாள் ஜனாதிபதிகள் முகமது அஹமத் இனிஜாத் மற்றும் ஹசன் ருஹானி உள்ளிட்டவர்களின் பதவிக்காலத்திலும் இந்த தலைநகர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனாலும், பொருளாதார பிரச்சினையால் புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சி கைக்கூடவில்லை. இப்போது மீண்டும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் காலத்தில் தலைநகரை மாற்றம் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.