சிலி நாட்டில் காட்டுத் தீ - இதுவரையில் 99 பேர் உயிரிழப்பு

சிலி நாட்டில் காட்டுத் தீ - இதுவரையில் 99 பேர் உயிரிழப்பு

சிலியின் - வால்பரைசோ பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரையில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த பகுதியில் அவசரகால நிலையை அறிவித்துள்ள அந்தநாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக், நிலைமையைச் சமாளிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இது சிலியில் இதுவரையில் ஏற்பட்ட மிகவும் மோசமான காட்டுத் தீ அனர்த்தம் என நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் கோடை விடுமுறையின்போது கடலோரப் பகுதிகளுக்குச் சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், தெரிவுசெய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளை இடைநிறுத்தவும், அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக கள மருத்துமனைகளை அமைக்குமாறும் அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஆயிரத்து 400 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுவதாகவும் சிலியின் உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் சுமார் 6,000 வீடுகள் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் வீட்டுவசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.